Tuesday, October 26, 2010

காங்கிரஸ் என்றால் என்ன?

இதுவரைக்கும் அரசியலே எழுதினதில்லை, சரி அப்படியென்ன அதில இருக்குன்னு பார்ப்போம்,, அடிப்படை அரசியல் தெரியாத நிறைய பேரு நாட்டில இருக்கும் போது கேள்வி கேட்பது கடமை.. இதோ என் டவுட்டு, பதிவுலக நிஜ அரசியல் புலிகள் கவனிக்கவும் :)

1. அதிமுக, திமுகவுக்கு எல்லாம் ஃபுல் பார்ம் நமக்கு தெரியும். காங்கிரஸுக்கு அப்படி எதாவது இருக்கா?

2.அரசியல்ல திடீர் திருப்பம்னு சொல்றாங்களே அது எப்படி? வில்லன் படத்துல கருணாஸ் சொல்லுவது மாதிரி டக்குனு திரும்பறதா?

3 ஒரே ஆளு நாலு கட்சி மாத்தி மாத்தி தாவறாரே, எந்த சர்க்கஸ்ல ப்ராக்டிஸ் பண்ணிருப்பாரு?

4. உடன்பிறப்புன்னு சொல்றாங்களே, அப்ப அத்தை, மாம்ஸ், சித்தப்பூன்னு எப்ப சொல்லுவாங்க?

5.அதிக கோஷ்டிகளை கொண்ட கட்சி எது? சரியா சொன்னா ’கை’பேசி பரிசளிக்கப்படும்?

6.கழக கண்மணிகள்னு சொன்னா கண் ஆஸ்பத்திரிக்கு மார்க்கெட்டிங் பண்ராங்கன்னு அர்த்தமா?

7.இளரத்தம் கட்சியில பாய்ச்சறோம்னு சொன்னா என்ன அர்த்தம்? வன்முறையை தூண்டனுமா?

8.சூறாவளி சுற்றுப்பயணம்னா அவிங்க போனதும் சுனாமி வருமா?

9.வாரிசு அரசியல்ல இந்த உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம் எல்லாம் அடக்கமா? அடங்குமா?

10. வாக்காளர்கள் என்பவர்கள் யாரு?

இப்போதைக்கு இவ்வளவுதான், இன்னும் இருக்கும் நிறைய பார்ட் வரும்.

 

24 comments:

கோபிநாத் said...

படிச்சிட்டேன் ;)

நட்புடன் ஜமால் said...

இன்னும் இன்னும் எதிர்ப்பார்க்கிறோம் உங்ககிட்ட :P

Thangaraju Ramasamy said...

சிறந்த கேள்விகள். பதில் சொல்ல அரசியல் புலி(ள்ளி)களை அழைக்கிறேன் -

Vidhya Chandrasekaran said...

அம்மா தாயே. போதும். இதோட நிறுத்திக்கோங்க.

வால்பையன் said...

//வாக்காளர்கள் என்பவர்கள் யாரு?//

ஏமாளிகள்!

வால்பையன் said...

வேட்பாளர்கள் என்பவர்கள் யாரு?

கோமாளிகள்(இது நம்ம பஞ்ச்)

Santhosh said...

ஏன்ன்ன்ன்ன்ன்

vinu said...

ithai oru pathivunnu solli vanthu padichaa naanga எல்லாம் அடக்கமா? அடங்குமா?

அபி அப்பா said...

காங்கிரஸ் பத்தின கேள்விக்கு எனக்கு பதில் தெரியலை, என்னா அகில இந்திய காங்கிரஸ் கட்சி என்பது மட்டுமே பழைய கட்சி! இது ஆரம்பிச்சு நூற்றாண்டு கடந்து விட்டது.காங்கிரசுக்கு இந்தியன் தான் தலைமை ஏற்கனும் என்பது அவ்ங்க் பைலா. அதனால் மட்டுமே அன்னிபெசந்த் அம்மையார் முதல் இன்றைய சோனியா அம்மையார் வரை அதுக்கு தலைவராக இருந்து வந்தாங்க, வந்துகிட்டு இருக்காங்க! இவங்க எல்லாம் முறையா இந்திய குடியுரிமை வாங்கினவங்க!

ஆனா காந்தி "காங்கிர்ஸ் ஏற்படுத்த சொன்ன நோக்கம் நிறைவேறிடுச்சு அதை கலைக்கலாம்" என சொன்ன போது இப்போதைய காங்கிரஸ் கலைக்க வில்லை.
என்னா காந்தி சொன்னது தப்புன்னு சொல்லிட்டாங்க அவ்ங்க! அது பத்தி எமக்கு கவலை இல்லை!...........தொடரும்

அபி அப்பா said...

இது போல விஜி காங்கிரசுக்கு முன்பு ராட்டை சின்ன்ம், பின்னே பசுவும் க்ன்றும் பின்னே கை.... இதல்லாம் மாறினது எப்படி தெரியுமா?

விஜி said...

கோபி :))

விஜி said...

ஜமால் சிக்குவேன்னு நினைக்கறீங்க :) மாட்டமில்ல

விஜி said...

தங்கராஜ், எல்லாம் சர்க்கஸ்ல இருக்காங்க போல வருவாங்க :)

விஜி said...

வித்யா ட்ரை பண்றேன் :)

விஜி said...

வாலு :))

விஜி said...

வினு, அரசியல்ல இதெல்லாம் சகஜம் :)

விஜி said...

சந்தோசு,, ச்ச்சும்மா :))

விஜி said...

அபி அப்பா, உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா? நான் பிறந்ததிலிருந்து காங்கிரஸ்னா கைதான் பார்த்திருக்கேன்

தமிழ் உதயன் said...

ரொம்பத்தான்

பவள சங்கரி said...

எனக்கும் கொஞ்சம் இந்த டவுட்டெல்லாம் யாராவது க்ளியர் பண்ணுங்கப்பா........

விஜி said...

ஹேய் உதய் எப்படி இருக்கீங்க?

விஜி said...

நித்திலம் :)

Unknown said...

எனது தாத்தா ஒரு சுதந்திர போராட்ட காங்கிரஸ் தியாகி
அந்த காலத்தில் வெள்ளைகாரர்கள் அனுமதி இல்லாமல் வயலில் அறுவடை செய்யகூடாது
அதை மீறி அறுவடை செய்துவிட்டு நெல் மூடைகளுடன் சென்று விட்டார்
அதற்கு என் அப்பத்தாவை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்
பின்பு தான் எனது தாத்தா சரண்டரானார் என் தாத்தா வை போல் பல காங்கிரஸ் தியாகிகளால் உருவான காங்கிரஸ் பே ரியக்கம்
இன்று தாங்களும் திராவிட கட்சியை போல் செயல்பட தொடங்கி கோஷ்டிகளாக பிரிந்துள்ளனர்
இதற்கு தான் அன்றே மகாத்மா சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் கலைக்க வேண்டுமென்றார்

இராஜராஜேஸ்வரி said...

4. உடன்பிறப்புன்னு சொல்றாங்களே, அப்ப அத்தை, மாம்ஸ், சித்தப்பூன்னு எப்ப சொல்லுவாங்க?
seekiramm சொல்லுவாங்க.... wait.

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க